உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னை சாலைக்கு எஸ்பிபி பெயர் : முதல்வர் அறிவிப்பு

சென்னை சாலைக்கு எஸ்பிபி பெயர் : முதல்வர் அறிவிப்பு

பின்னணி பாடகர் எஸ்பி பாசுப்ரமணியம் மறைந்த இன்றைய நாளில் சென்னையில் அவர் வாழ்ந்த குடியிருப்பு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமை எஸ்.பி.பாலசுப்ரமணியம். 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். சென்னையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த நுங்கம்பாக்கம் காம்தார் தெருவிற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று எஸ்.பி.பி.சரண் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று சென்னை, நுங்கம்பாக்கம் காம்தார் முதல் தெருவிற்கு 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம்' சாலை என பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திரையுலகில் எஸ்பிபி-யின் கலைச் சேவையை பாராட்டி பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !