மீண்டும் சூர்யா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
ADDED : 457 days ago
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. இந்த படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனது 44 வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா . அந்த படத்தை முடித்ததும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இப்படம் குறித்த ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது இந்த படத்தில் இசையமைக்க அனிருத் கமிட்டாகி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து 2018ம் ஆண்டில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்திற்கு இசை அமைத்திருந்த அனிருத், இப்போது சூர்யா 45வது படத்தின் மூலம் மீண்டும் அவரது கூட்டணியில் இணையப் போகிறாராம்.