உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆயிரம் படங்கள் நடித்த அபூர்வ அப்பத்தா - வைரலாகும் அகிலாவின் வீடியோ

ஆயிரம் படங்கள் நடித்த அபூர்வ அப்பத்தா - வைரலாகும் அகிலாவின் வீடியோ


தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான பி.ஆர்.வரலெட்சுமி 1970களில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். தற்போது பல சீரியல்களில் நடித்து வரும் இவர், சுந்தரி தொடரில் அனைவருக்கும் பேவரைட்டான அப்பத்தா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் வரலெட்சுமியின் வரலாறு இந்த தலைமுறை நேயர்கள் பலருக்கும் தெரியாது.

இந்நிலையில், அவருடன் நடித்து வரும் சக நடிகையான அகிலா தனது யூ-டியூப் சேனலில் பி.ஆர். வரலெட்சுமியின் அருமை பெருமைகள் குறித்து பேசி 'ஆயிரம் படங்கள் நடித்த அபூர்வ சிந்தாமணி' என்கிற வீடியோவை வெளியிட்டிருக்கிறார். மேலும் பல சுவாரசிய தகவல்களுடன் அகிலா வெளியிட்டுள்ள அந்த வீடியோவானது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !