குடும்பஸ்தன் ஆக மணிகண்டன்!
ADDED : 375 days ago
குட் நைட், லவ்வர் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் அடுத்து தொடர்ந்து கவனமாக கதைகளைத் தேர்ந்தெடுத்து கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் நக்கலைட்ஸ் யூடியூப் வீடியோக்களின் மூலம் பிரபலமான ராஜேஸ்வர் காளி சாமி இயக்கும் புதிய படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து வந்தார். தற்போது இந்த படத்திற்கு 'குடும்பஸ்தன்' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
இதில் குரு சோமசுந்தரம்,சன்வி மேகனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வைஷாக் இதற்கு இசையமைத்துள்ளார்.