குட் பேட் அக்லி படத்தில் இணைந்த வேதாளம் பட நடிகர்!
ADDED : 375 days ago
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடித்து வருகின்றார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இதில் கதாநாயகியாக திரிஷா நடிக்கின்றார். சுனில், அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் மற்றுமொரு கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் இப்போது இணைந்துள்ளார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் மழை, வேதாளம், ஆதவன், முனி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நகரில் வருகின்ற அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குகிறது. இதற்காக இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் தற்போது அங்கு சென்று லொக்கேஷன் பார்த்து வருகின்றனர்.