மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
341 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
341 days ago
எதிர்பாராத தோல்வி என்பது எல்லா நடிகர்களின் கேரியரிலும் உண்டு. மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் தோல்வி அடைந்து அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அப்படி ரஜினிக்கு கிடைத்த அனுபம்தான் 'காளி'.
மலையாள சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்த ஐ.வி.சசியின் இயக்கம், மலையாள சினிமாவின் கவர்ச்சி கன்னி சீமா நாயகி, வெண்ணிற ஆடை நிர்மலா, படாபட் ஜெயலட்சுமி என மேலும் இரண்டு ஹீரோயின்கள், இதுதவிர ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள். பிரமாண்ட விளம்பரங்கள், ரஜினிக்கு 60 அடி உயர கட்-அவுட்கள் என பெரிய பில்டப்புடன் படம் வெளிவந்தது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகி இருந்தது.
குடும்பத்தையே கொன்று குவித்த வில்லன்களை ஹீரோ பழிவாங்குவததான் படத்தின் கதை. அதிரடி சண்டை காட்சிகள், அசோக்குமாரின் அழகான ஒளிப்பதிவு, இளையராஜாவின் அருமையான பாடல்கள் இருந்தும் ஏனோ படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
சென்னையில் 50 நாட்கள் மட்டுமே ஓடியது. தமிழில் விஜயகுமார் நடித்த கேரக்டரில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்திருந்தார். தெலுங்கில் தமிழை விட சற்று கூடுதலாக ஓடினாலும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதே உண்மை. ரஜினிக்கு இந்த படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது.
341 days ago
341 days ago