உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோயின் ஆக இசை ஆல்பத்தில் ஆடிய பிரிகிடா சாகா

ஹீரோயின் ஆக இசை ஆல்பத்தில் ஆடிய பிரிகிடா சாகா


ஆஹா கல்யாணம் தொடரில் பவி டீச்சராக கலக்கிய பிரிகிடா சாகா இப்போது சினிமா ஏரியா பக்கம் உலா வருகிறார். அயோக்யா படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு மாஸ்டர், இரவின் நிழல், வேலன், கருடன், கோழிப்பண்ணை செல்லதுரை ஆகிய படங்களில் நடித்தார். ஆனாலும் கிராமத்து பெண்ணின் சாயல் கொண்ட அவருக்கு இன்னும் ஹீரோயின் வாய்ப்பு வரவில்லை.

இதனால் தனது கிராமிய தோற்றம், ஆடல், பாடல் இவற்றை வெளிப்படுத்தும் விதமாக 'திமிருகாரியே' என்ற இசை ஆல்பத்தில் ஆடியுள்ளார். கோவில் திருவிழா பின்னணியில் உருவாகி உள்ள இந்த பாடலை அந்தோணி தாசன் பாடி உள்ளார். ஸ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில் 'டிரெண்டிங் தீவிரவாதி' கவுதம் மற்றும் பிரிகிடா இணைந்து ஆடி உள்ளனர். மல்லிகா அர்ஜூன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கவுதம் புரொடெக்ஷன்ஸ் தயாரிக்க செந்தில்குமார் சரிதா சார்பில் எஸ்.எஸ். அன்ட் கோ இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் பாடல் யூடியூப் மற்றும் முன்னணி இசை தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !