மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
338 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
338 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
338 days ago
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களாக வில்லன் நடிகராக நடித்த ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் மோகன்ராஜ். 70 வயதான இவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ஹிந்தியிலும் 'நியூ டில்லி' என்கிற படத்தில் நடித்துள்ளார். தமிழில் தர்மதுரை, தில், ஏழுமலை, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கடந்த 2022ல் மம்முட்டி நடிப்பில் வெளியான 'ரோஷாக்' படம் தான் இவர் கடைசியாக நடித்தது.
ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன அடியாள் கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவருக்கு மோகன்லால் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தில் நடித்த கீரிக்காடன் ஜோஸ் என்கிற கதாபாத்திரம் மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. அதிலிருந்து பெரும்பாலும் அனைவருமே இவரது ஒரிஜினல் பெயரான மோகன்ராஜ் என்பதை மறந்துவிட்டு கீரிக்காடன் ஜோஸ் என்று அழைக்க துவங்கி விட்டார்கள்.
இந்த நிலையில் இவரது மறைவு குறித்து நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “ஒரு படத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயராலேயே ஒரு நடிகர் அனைவராலும் அழைக்கப்படுவது என்பது அவரது நடிப்பிற்கு கிடைக்க கூடிய மிகப்பெரிய பரிசு. அப்படி கிரீடம் படத்தில் நடித்த அவர் கீரிக்காடன் ஜோஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த அவர் நம்மை விட்டு மறைந்து விட்டார். தன்னுடைய கம்பீரமான உருவத்துடன் கிரீடம் படப்பிடிப்பில் அவர் கேமரா முன் நின்றது நேற்று நடந்தது போல இருக்கிறது. தன்னுடைய சொந்த வாழ்க்கையில் மிகச்சிறந்த மனிதராகவும் எனது நண்பராகவும் இருந்த அவருக்கு கண்ணீருடன் பிரியா விடை கொடுக்கிறேன்” என்று கூறியுள்ளார். மம்முட்டியும் நடிகர் மோகன் ராஜூக்கு அஞ்சலி என்று குறிப்பிட்டுள்ளார்.
338 days ago
338 days ago
338 days ago