தமிழில் அறிமுகமாகும் ஹிருதயம் பட இசையமைப்பாளர்
ADDED : 376 days ago
மலையாளத்தில் வெளிவந்த 'ஹிருதயம்' படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப். ஹிருதயம் படத்தின் பாடல்களுக்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தெலுங்கில் 'ஹாய் நானா, குஷி' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது தமிழில் இசையமைப்பாளர் ஆக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீ காந்த் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இதற்கு ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கின்றார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். குட் நைட், லவ்வர் போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் புரொடக்சன்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்துள்ளனர்.