உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2025, ஆக., 14ம் தேதியில் வெளியாகும் ‛வார் 2'

2025, ஆக., 14ம் தேதியில் வெளியாகும் ‛வார் 2'

ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான வார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வார் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார்.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். அயன் முகர்ஜி இயக்குகிறார். ஏற்கனவே இந்த படத்தை ஜனவரி 24, 2025ம் அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 14ந் தேதி அன்று வார் 2 படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !