படப்பிடிப்பில் விபத்து : சிறிய காயத்துடன் தப்பினார் ஹம்சவர்தன்
ADDED : 411 days ago
புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், மந்திரன் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் ஹம்சவர்தன். தற்போது அவர் மகேஸ்வரா என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். இந்த படத்தை மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹரா என்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்குகிறார். ராம்கி, கருடா ராம், பி.எல்.தேனப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சஸ்பென்ஸ் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் நடைபெற்று வருகிறது. அங்கு ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கி உள்ளார். அப்போது ஹம்சவர்தன் நடித்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு சிறு காயத்துடன் தப்பி இருக்கிறார். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.