உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சோலோ ஹீரோயின் ஆனார் சம்யுக்தா : போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்

சோலோ ஹீரோயின் ஆனார் சம்யுக்தா : போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்

'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சம்யுக்தா. தற்போது சோலோ ஹீரோயினாகவும், போலீஸ் அதிகாரியாகவும் 'மெட்ராஸ் மாபியா கம்பெனி' என்ற படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கும் இந்தப் படத்தை அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர். முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ் மற்றும் ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஷோக் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளர் சுகந்தி அண்ணாதுரை எழுதியுள்ளார். படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !