யோகிபாபுவை இயக்கும் ஜெயம் ரவி!
ADDED : 358 days ago
ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. அதை அடுத்து ஜீனி, காதலிக்க நேரமில்லை என்ற இரண்டு படங்களில் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் விரைவில் ஒரு படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. அவர் இயக்கும் அந்த முதல் படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்க இருக்கிறாராம். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே நடிகர் தனுஷ், படங்களில் நடித்துக் கொண்டே படங்கள் இயக்கி வரும் நிலையில், ஜெயம் ரவியும் அதே ரூட்டில் பயணிக்கப்போகிறாராம்.