உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த தமன்னா!

அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த தமன்னா!


தற்போது தமன்னாவுக்கு தமிழில் படங்கள் இல்லாத நிலையில் ஹிந்தி, தெலுங்கில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மகாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை செயலியான 'பேர்ப்ளே' என்ற விளம்பரத்தில் நடித்திருந்தார் தமன்னா. இது ஒரு சட்ட விரோத செயலியாகும். அதோடு இந்த செயலி மீது கடந்த ஆண்டில் பண மோசடி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அது குறித்த விசாரணை நடந்துவரும் நிலையில் அந்த செயலி சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகை தமன்னாவுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமன்னாவிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு பிறகு அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார் தமன்னா. அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !