நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இருக்க தவறிவிட்டேன் : சமந்தா வருத்தம்
ஹாலிவுட் தொடரான ‛சிட்டாடல்' ஹிந்தியில் வருண் தவான், சமந்தா நடிப்பில் வெப்சீரிஸாக உருவாகி உள்ளது. இதில் இருவரும் உளவாளியாக நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த தொடருக்கான புரொமோஷனில் சமந்தா ஈடுபட்டுள்ளார். அவரிடம் நிஜ வாழ்க்கையில் நீங்கள் ஸ்பையாக இருந்தீர்களா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு சமந்தா, ‛‛நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இருந்திருக்க வேண்டியது. அதை செய்யாதது தவறு. ஸ்பையாக இல்லாததால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது'' என்றார்.
தனது முன்னாள் கணவர் நாகசைதன்யா உடனான பிரிவை வைத்தது இப்படி ஒரு பதிலை தந்திருக்கிறார் சமந்தா என்கிறார்கள் ரசிகர்கள். காரணம் நடிகை சோபிதா துலிபாலா உடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கத்தாலேயே சமந்தா, நாகசைதன்யா இடையே பிரச்னை உருவானதாக சொல்கிறார்கள். இப்போதை சோபிதாவை தான் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார்.