அரண்மனை 5 படத்திற்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் ஆதி
ADDED : 354 days ago
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தின் நான்கு பாகங்களும் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் ஐந்தாம் பாகத்திற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக அரண்மனை 4 படம் 2024ம் ஆண்டின் முதல் 100 கோடி வசூல் படமாக அமைந்ததோடு, முந்தைய மூன்று பாகங்களின் சாயல் இல்லாமல் மாறுபட்ட ஹாரர் கதையில் உருவாகி இருந்தது. தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில் அடுத்தபடியாக அரண்மனை 5வது பாகத்தையும் மாறுபட்ட ஹாரர் காமெடி கதையில் இயக்க தயாராகி வரும் சுந்தர். சி இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதியை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் அடுத்த ஆண்டு கோடையில் திரைக்குப் வரப்போகிறது.