சூர்யாவின் உயரம் குறித்த விமர்சனங்களுக்கு பாபி டியோல் பதில்!
ADDED : 402 days ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் 'கங்குவா'. இதில் பாபி டியோல், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகின்ற நவம்பர் 15ம் தேதி திரைக்கு வருவதையொட்டி தற்போது இதற்கான புரோமொசன் நிகழ்ச்சிகள் வட இந்தியாவில் இருந்து தொடங்கியுள்ளனர். இதில் சிறுத்தை சிவா, சூர்யா, திஷா பதானி, பாபி டியோல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சூர்யா குறித்து பேசிய பாபி டியோல், அவரின் உயரம் குறித்து கவலை பட வேண்டாம். ஏனெனில், அவரின் நடிப்பு திறமையினால் மற்றவர்களை விட உயரமாக நிற்கிறார். அவரின் நடிப்பு என்னை பிரமிக்க வைத்தது. அவர் செய்த அனைத்து ஸ்டன்ட் காட்சிகளும் எந்தவொரு டூப் இல்லாமல் அவரே செய்தார். அவர் வலிமையான நபர் என தெரிவித்தார்.