'இட்லி கடை'யில் அருண் விஜய்தான் ஹீரோ
ADDED : 370 days ago
நடிகராக மட்டும் அல்லாது இயக்குனராகவும் தனது முத்திரையை பதித்து வருகிறார் தனுஷ். ப.பாண்டி, ராயன் படங்களுக்கு பிறகு தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதை தொடர்ந்து 'இட்லி கடை' என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி, தேனி பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்த படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே நடித்து வருகிறார்கள், ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் தனுஷ் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் படத்தின் நாயகன் அருண் விஜய் என்றும், அவர் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கவுரவ தோற்றத்தில் தனுஷ் நடிக்கிறார். இது தொடர்பான முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும் என்று தெரிகிறது.