உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிறடிக்க ஆசை தொடரில் நாதஸ்வரம் நடிகை?

சிறடிக்க ஆசை தொடரில் நாதஸ்வரம் நடிகை?


பிரபல சின்னத்திரை நடிகையான பென்சி, இயக்குநர் திருமுருகன் இயக்கிய 'நாதஸ்வரம்' உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அண்மையில் திருமுருகன் தனது புதிய சீரியலின் கதையை தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் மிக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் பென்சி அறிவித்திருந்தார். ஆனால், இப்போதுவரை திருமுருகன் குழுவினரின் அடுத்த சீரியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பென்சி, 'சிறகடிக்க ஆசை' தொடரில் முக்கியமான ரோலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. அதற்கு காரணம் சிறகடிக்க ஆசை தொடரில் வித்யா கேரக்டரில் நடிக்கும் ஸ்ருதி நாராயணனுடன் பென்சி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை வைத்து தான் பென்சி சிறகடிக்க ஆசை தொடரில் நடிக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !