இசை ஆல்பத்தில் நடித்த பாலா
ADDED : 339 days ago
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா. தற்போது திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். இது தவிர தனது சமூக சேவைகளின் மூலமும் கவனம் ஈர்த்து வருகிறார். இந்த நிலையில் தற்போது 'ராக்காயி' என்ற இசை ஆல்பத்தில் ஆடியுள்ளார்.
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் பிங்க் ரிகார்ட்ஸ் இதனை தயாரித்துள்ளது. கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் இதை இணைந்து தயாரித்துள்ளனர். பாலாவுடன் நட்சத்திர தம்பதிகள் சேத்தன், தேவதர்ஷினியின் மகளான '96' திரைப்பட புகழ் நியதி ஆடி நடித்துள்ளார். ஏ.கே.பிரியன் இசை அமைத்துள்ளார், கார்த்திக் ஸ்ரீநிவாஸ், வருஷா பாலு இணைந்து பாடியுள்ளனர். அபு மற்றும் சல்ஸ் இயக்கி உள்ளனர். யு டியூப் தளத்தில் வெளியாகி உள்ளது.