ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித்
ADDED : 376 days ago
நடிகர் மாதவன் தீபாவளி பண்டிகையை துபாயில் உள்ள தனது வீட்டில் கொண்டாடியிருக்கிறார். அந்த விழாவில் கலந்து கொள்ள தனது நண்பர்கள், உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் . இந்த நிலையில் தற்போது வெக்கேஷனுக்காக துபாய் சென்றிருக்கும் நடிகர் அஜித் குமாரும் மாதவன் வீட்டில் நடந்த அந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மாதவனின் நண்பர்கள் உறவினர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வாரத்தில்தான் மாதவனை 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் என்றென்றும் புன்னகை என்று கேப்சனுடன் ஷாலினி அஜித் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.