உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ்

தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ்

சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் 2ம் பாக கதை முதலில் வெளியாகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சிபு தமின்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என்றார்கள். ஆனால் தற்போது கேம் சேஞ்சர் படம் பொங்கலுக்கு வெளியாவதால் ‛வீர தீர சூரன்' படம் தள்ளி வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !