ரஜினி பிறந்த நாளில் முதல் முறையாக ரீ ரிலீஸ் ஆகும் தளபதி படம்!
ADDED : 323 days ago
கடந்த 1991ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி இணைந்து நடித்து வெளியான படம் 'தளபதி'. இந்த படத்தில் வித்தியாசமான ஒரு ரஜினியை ரசிகர்களுக்கு பிடித்தவாறு உருவாக்கிருந்தார் மணிரத்னம்.
இந்த நிலையில் 33 வருடங்களுக்கு பிறகு தளபதி திரைப்படம் முதல்முறையாக ரஜினியின் இவ்வருட பிறந்த நாள் தினமான டிசம்பர் 12ம் தேதி ரீ மாஸ்டர் செய்து வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். பெரும்பாலும் ரஜினி பிறந்த நாளில் பாட்ஷா, சிவாஜி, பாபா ஆகிய படங்கள் தான் ரீ ரிலீஸ் ஆகும் இம்முறை தளபதி படம் ரீ ரிலீஸ் ஆகிறது.