விடுதலை 2ம் பாகத்திலும் பாடியுள்ள தனுஷ்!
ADDED : 323 days ago
நடிகர் தனுஷ் இயக்கம், தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமையை கொண்டவர். அவரது படங்களைக் கடந்து அவரின் நெருங்கிய நண்பர்களுக்காக ஒரு சில படங்களில் பாடல் பாடி உள்ளார்.
அந்த வரிசையில் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்த 'விடுதலை 1' படத்தில் 'உன்னோடு நடந்தால்' எனும் பாடலை தனுஷ் பாடினார். தற்போது விடுதலை 2ம் பாகத்திலும் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். சமீபத்தில் இதன் ரெக்கார்டிங் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.