பெருங்களத்தூர் பாலத்தில் இருந்து குதித்த சிவகார்த்திகேயன்!
ADDED : 332 days ago
சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்துள்ள அமரன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கும் 23வது பட வேலைகளில் மீண்டும் பிஸியாகி விட்டார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்க, துப்பாக்கி படத்தில் நடித்த வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் ஒரு காட்சியை சென்னையை அடுத்துள்ள பெருங்களத்தூரில் நடத்தி இருக்கிறார் முருகதாஸ். அப்போது பெருங்களத்தூரில் உள்ள உயரமான பாலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. அது குறித்து வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.