உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறிய அஞ்சலி!
ADDED : 432 days ago
ஏழு கடல் ஏழுமலை, ஈகை, கேம் சேஞ்சர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. இதில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படம் வருகிற ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், ஒரு முக்கிய காதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். மேலும், சமீபகாலமாக ஓரளவு வெயிட் போட்டிருந்த அஞ்சலி தற்போது தனது உடல் எடையை பெரிய அளவில் குறைத்திருக்கிறார். இதனால் ஆளே அடையாளமே தெரியாத அளவுக்கு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார் அஞ்சலி. இந்த தோற்றத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் அஞ்சலி.