விடாமுயற்சி படத்தின் சிறு பிஜிஎம் வைரல்
ADDED : 431 days ago
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆதவ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடித்து விட்ட நிலையில் அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் பின்னணி இசைப்பணிகளை தொடங்கி இருக்கிறார் அனிருத். அதோடு விடாமுயற்சி படத்தின் ஆர்கெஸ்ட்ரா பிஜிஎம் குறித்த ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவும், அதன் பின்னணி இசையும் ரசிகர்களை கவர வைரலானது.