விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி
ADDED : 325 days ago
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 69 வது படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, மமிதா பாஜு, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விஜய் 69 வது படத்தில் சமீபத்தில் மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தில் வில்லி வேடத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி. அந்த வகையில் இந்த விஜய் 69 வது படத்திலும் அவர் வில்லியாக நடிக்கிறாரா? இல்லை வேறு எந்தமாதிரி ரோலில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகவில்லை.