சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ்
ADDED : 323 days ago
கன்னடத்தில் சிவராஜ் குமாரின் மிகப்பெரிய வெற்றி படமான ‛மப்டி' படத்தின் இரண்டாம் பாகம் 'பைரதி ரணங்கள்' எனும் தலைப்பில் உருவாகிறது. நாரதன் இயக்கத்தில் சிவராஜ் குமார் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருடன் இணைந்து ருக்மணி வசந்த், ராகுல் போஸ், சாயா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளிவந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பு மற்றும் தெலுங்கு பதிப்பு வருகின்ற நவம்பர் 29ம் தேதி அன்று தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியிடுவதாக டிரைலருடன் அறிவித்துள்ளனர்.