'மல்லி' தொடரில் என்ட்ரி கொடுக்கும் ஜெய் எஸ் கே!
ADDED : 322 days ago
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'மல்லி' தொடரில் நிகிதா ராஜேஷ், விஜய் வெங்கடேசன், கிரேஸி தங்கவேல், பூர்ணிமா பாக்யராஜ் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 190 எபிசோடுகளை கடந்துள்ள இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் ஜெய் ஸ்ரீநிவாச குமாரும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கிறார். இவர் ஏற்கனவே 'சுந்தரி' தொடரில் சித்து கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் என்பதால், அவரது என்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.