கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். அவருக்கும் அவரது நீண்ட வருட காதலர் ஆண்டனி தட்டில் என்பவருக்கும் அடுத்த மாதம் திருமணம் என கடந்த இரண்டு வாரங்களாக செய்திகள் வெளிவந்தன.
இதனிடையே, இன்று காலை தனது அப்பா, அம்மா ஆகியோருடன் திருப்பதியில் பெருமாளை தரிசனம் செய்த பின் அவர் அளித்த பேட்டியில், “அடுத்த மாதம் கோவாவில் எனது திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக வந்து சாமி கும்பிட்டேன்” என்று கூறியுள்ளார்.
பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொள்ள இருக்கும் கீர்த்தி திருமணத்திற்குப் பிறகு நடிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.