உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன்

20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன்

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன், தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவர்களது மகளாக நடித்தார். அதன்பிறகு சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்த விஸ்வாசம் படத்திலும் அவர்களது மகளாக நடித்திருந்தார். அதன்பிறகு மிருதன், மாமனிதன், பிடி சார், புட்ட பொம்மா என பல படங்களில் நடித்த அனிகா ற்போது தனுஷ் இயக்கி உள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய இருபதாவது பிறந்தநாளை தனது வீட்டில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் அனிகா சுரேந்திரன். அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அவர் வெளியிட்டு இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !