உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 45வது படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா!

45வது படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா!


கங்குவா படத்திற்கு பிறகு கார்த்தி சுப்பராஜ் இயக்கி உள்ள தனது 44வது படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா, அதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் 'ஆறு' படத்தில் பிறகு மீண்டும் திரிஷா அவருக்கு ஜோடியாகி இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஏற்கனவே, எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் போன்ற படங்களில் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்த சூர்யா, மீண்டும் இந்த 45வது படத்திலும் அதே வேடத்தில் நடித்து வருகிறார். இதே வேடத்தில் அவர் நடித்த ஜெய் பீம் படம் அவருக்கு பெரிய வெற்றியாக அமைந்ததால் அந்த செண்டிமெண்ட் இந்த நாற்பத்தி ஐந்தாவது படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !