தனுஷ் ஒரு மிகச் சிறந்த மனிதர்! - சொல்கிறார் ரோபோ சங்கர்
ADDED : 275 days ago
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருபவர் ரோபோ சங்கர். தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் இவரது வேடம் பேசப்பட்டது. இந்த நிலையில், ரோபோ சங்கர் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனுஷ் பற்றி கூறுகையில், ''எனது சினிமா பயணத்தில் தனுசுடன் நடித்த மாரி படம் முக்கியமானது. அவரைப் பொறுத்தவரை மற்றவர்களை ஏற்றிவிட்டு அழகு பார்க்கக்கூடிய ஒரு ஏணியாக இருக்கிறார். என்னிடத்தில் ஒரு குழந்தை போலவே பழகக்கூடிய தனுஷ், நடிகர் என்பதை தாண்டி ஒரு சிறந்த மனிதராக மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார். என்னுடைய வாழ்க்கையில் அவரை மறக்கவே முடியாது,'' என்று தெரிவித்திருக்கிறார் ரோபோ சங்கர்.