உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல்

புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா 2' படம் அமெரிக்காவில் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. படத்தின் பிரிமியர் காட்சிக்கான வசூல் மட்டுமே 3.3 மில்லியன் யுஎஸ் டாலரைக் கடந்தது. நேற்று முதல் நாள் வசூலாக மட்டும் ஒரு மில்லியனைக் கடந்துள்ளது. பிரிமியர் மற்றும் முதல் வசூல் 4.4 மில்லியன் யுஎஸ் டாலரைக் கடந்ததாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள வினியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் பிரிமியர் காட்சிகளில் அதிக வசூலைக் குவித்த இந்தியப் படங்களில் டாப் 3 இடத்தில் உள்ளது 'புஷ்பா 2'. பிரிமியர் காட்சிகளின் மூலம் அதிக வசூலைக் குவித்த படங்களில் 3.9 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து 'கல்கி 2898 ஏடி' படம் உள்ளது. மொத்தமாக அதிக வசூலைக் குவித்த படங்களில் 'பாகுபலி 2' படம் 20 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'புஷ்பா 2' முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !