சூர்யா 45வது படத்தில் விஜய் சேதுபதி?
ADDED : 299 days ago
கங்குவா படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயன்கர் இசையமைக்கின்றார். கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி உடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக எந்தவொரு படங்களிலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் விஜய் சேதுபதி.