தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு
ADDED : 415 days ago
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் பிரீமியர் காட்சி ஒரு நாள் முன்னதாக நடைபெற்றது. அப்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். அதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 39 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்தார்.
அதைத் தொடர்ந்து அத்தியேட்டரின் உரிமையாளர், மேனேஜர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அது மட்டுமல்லாமல் அல்லு அர்ஜுன் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார் அல்லு அர்ஜுன்.
மரணம் அடைந்த பெண்ணிற்கு அல்லு அர்ஜுன் சார்பாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர். புஷ்பா 2 படம் நேற்றுடன் 1000 கோடி வசூலித்துள்ளது.