சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள்
நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடிகை அதிதி ராவை திருமணம் செய்து கொண்டார். திருமண ராசியால் அவருக்கு தற்போது படங்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக 'சித்தா' படத்திற்கு பிறகு அதிக படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். நாளை அவர் நடித்துள்ள 'மிஸ் யூ' படம் வெளியாகிறது.
இதுகுறித்து சித்தார்த் கூறும்போது, ''நான் காதல் படங்களில் நடிக்க விரும்புவது இல்லை. அதுமாதிரி படங்களில் நடித்தால் குறிப்பிட்ட இமேஜ் விழுந்து விடும் என்பற்காக தவிர்த்தேன். ஆனால் இயக்குனர் ராஜசேகர், பிடிக்காத பெண்ணை காதலிக்கும் வேடம் என்றதால் வித்தியாசமாக உள்ளது என்று 'மிஸ் யூ' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
'சித்தா' படத்துக்கு பிறகு எனக்கு நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன. அடுத்து 8 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளேன். இதில் மூன்று படங்கள் ரெடியாகி விட்டன. இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. வருகிற 13 மாதங்களில் நான் நடித்த 'மிஸ் யூ' உள்ளிட்ட 4 படங்கள் திரைக்கு வர உள்ளன. அடுத்து சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து அதில் நாயகனாக நடிக்க இருக்கிறேன். இந்த படத்துக்கான திரைக்கதை தயாராகி விட்டது. படத்தை இயக்குபவர் உள்ளிட்ட இதர விவரங்கள் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும்'' என்றார்.