உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கீர்த்தி சுரேஷ் திருமணம் - தனி விமானத்தில் விஜய், த்ரிஷா பயணம்

கீர்த்தி சுரேஷ் திருமணம் - தனி விமானத்தில் விஜய், த்ரிஷா பயணம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில் ஆகியோரது திருமணம் நேற்று கோவாவில் நடைபெற்றது. அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.



அத்திருமணத்தில் கலந்து கொள்ள நடிகர் விஜய், நடிகை த்ரிஷா தனி விமானம் ஒன்றில் பயணித்தது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த சிறப்பு விமானத்தில் அவர்களுடன் உதவியாளர்கள் நால்வர் என மொத்தம் ஆறு பேர் பயணித்துள்ளனர். சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 6.45 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டுள்ளது.

அதில் பயணம் செய்வதற்காக விஜய், த்ரிஷா ஆகியோர் விமான நிலையத்தில் செக்யூரிட்டி சோதனை செய்த வீடியோக்களும் வெளியாகி உள்ளன. இருவரும் ஒன்றாகப் பயணம் செய்தது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கமெண்ட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.



கீர்த்தி சுரேஷிற்கு திருமண வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாவில் அவர்களின் போட்டோவை வெளியிட்டுள்ள நடிகை திரிஷா அதன் உடன் திருமணத்தின் போது தங்களுக்கு வைக்கப்பட்ட உணவு வகைகளையும் போட்டோ உடன் வெளியிட்டுள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !