தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாராவுக்கு நோட்டீஸ்
ADDED : 324 days ago
நயன்தாராவின் திருமண வீடியோ கடந்த மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வீடியோவில் தனுஷ் தயாரித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் 10 கோடி நஷ்டஈடு கேட்டு நயன்தாரா மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன், வீடியோவை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த பதில் மனுவை மனுதாரர் தரப்புக்கு அளிக்க வேண்டும். இது தொடர்பாக அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வருகிற ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளி வைத்தது.