திருஷ்டி சுற்றி அல்லு அர்ஜுனை வரவேற்ற குடும்பத்தினர்
'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்த போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதற்கு அல்லு அர்ஜுனும் ஒரு காரணம் என ஆந்திர காவல் துறை நேற்று அவரைக் கைது செய்தது. ரிமாண்ட் செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் இன்று காலை வெளியில் வந்தார் அல்லு அர்ஜுன்.
வீட்டுக்கு வந்த அவரை அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். அவருடைய தம்பி அல்லு சிரிஷ், மனைவி சினேகா, மகன், மகள் ஆகியோர் வாசலுக்கே வந்து அவரை கட்டியணைத்து முத்தமிட்டு வரவேற்றனர். மேலும் உறவினர்கள் பலரும் அவரை அன்புடன் ஆறுதல் தெரிவித்தனர்.
வீட்டுப் பணியாளர் பெரிய பூசணிக்காய் வைத்து திருஷ்டி சுற்றிப் போட்டார். பின் நிருபர்களை சந்தித்த அல்லு அர்ஜுன், தான் சட்டத்தை மதிப்பதாகவும், பெண் இறந்தது துரதிர்ஷ்டவசமானது என்றும், அவர்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வேன் என்றும் தெரிவித்தார்.