மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
293 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
293 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
293 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
293 days ago
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், 'புஷ்பா 2' நடிகருமான அல்லு அர்ஜுன் நேற்று காலையில் கைது செய்யப்பட்டு, இன்று காலையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த வாரம் 'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி நடைபெற்ற போது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்தார்.
சினிமா காட்சியில் ஒரு பெண் அகால மரணம் அடைந்தது குறித்து தயாரிப்பு நிறுவனமும், நடிகர் அல்லு அர்ஜுனும் மட்டுமே அப்போது இரங்கல் தெரிவித்திருந்தனர். அல்லு அர்ஜுன் அப்பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்சம் தருவதாகவும் அறிவித்தார். அந்த மரணம் காரணமாக தியேட்டர் உரிமையாளர், மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டு, இன்று காலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது கைதுக்கு தெலுங்குத் திரையுலகமே திரண்டு வந்து நேற்று சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தது.
இருந்தாலும் அனைவருமே கூட்ட நெரிசலில் இறந்த பெண்ணிற்கு இரங்கல் தெரிவித்த பிறகே கண்டனத்தைப் பதிவு செய்தனர். அந்தப் பெண் இறந்த போது தெலுங்குத் திரையுலகத்தினர் அது குறித்து வாய் திறக்கவில்லை. மாறாக, அல்லு அர்ஜுன் கைதுக்கு மட்டும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.
தெலங்கானா அரசு ஏற்கெனவே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டது. அது போல ஆந்திர அரசும் அப்படி அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படியான கூட்டம் கூடுவதை இனியாவது தெலுங்கு ஹீரோக்கள் தவிர்க்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
293 days ago
293 days ago
293 days ago
293 days ago