உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : சிவனையும், விஷ்ணுவையும் இணைத்த 'பக்த கௌரி'

பிளாஷ்பேக் : சிவனையும், விஷ்ணுவையும் இணைத்த 'பக்த கௌரி'

இப்போது ஜாதி சண்டைகள் பின்னணியில் காதல் திருமணம், கலப்பு திருமணத்தை வலியுறுத்தி திரைப்படங்கள் வருவது மாதிரி, அந்த காலத்தில் கடவுள் சண்டையை மையமாக வைத்து வெளிவந்த படம் 'பக்த கௌரி'. சிவனை வழிபடுகிறவர்கள் சைவர்களாகவும், விஷ்ணுவை வழிபடுகிறவர்கள் வைணவர்களாகவும் இருந்தார்கள். எந்த கடவுள் உயர்ந்தவர் என்ற விவாதம் அடிக்கடி நடக்கும், ஆனால் இருவரும் ஒருவரே என்பதுதான் இந்து வேதம், 'அரியும், சிவனும் ஒண்ணு இதை அறியாதவர் வாயில் மண்ணு' என்பார்கள்.

இந்த பிரச்னையை மையமாக வைத்து உருவான படம்தான் 'பக்த கௌரி. பூலோகத்தில் சிவன், விஷ்ணு சண்டை அதிகரிப்பதால் அதனை சிவபெருமான் கவனத்திற்கு கொண்டு செல்வார் நாரதர். உடனே தனது பக்தர்களில் கவுரியை சிவனை வழிபடுகிறவராகவும், எஸ்.டி.சுப்பையாவை விஷ்ணுவை வழிபடுகிறவராகவும் பிறக்க வைத்து, இருவரையும் காதலிக்க வைப்பார். இந்த காதலால் வரும் பிரச்னைகளை எதிர்கொண்டு சிவனும், விஷ்ணுவும் ஒன்றுதான் என்று சொல்வதுதான் படம்.

இரண்டாம் நாயகி மற்றும் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த யு.ஆர்.ஜீவரத்தினம் இந்த படத்தில் நாயகியாக நடித்தார். நாயகனாக எஸ்.டி.சுப்பையா நடித்தார். பந்துலு சிவனாக நடித்தார், பி.எஸ்.சிவபாக்கியம் வில்லனாக நடித்தார். மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த படத்தை எஸ்.நோதானி இயக்கினார். ஆர்க்கெஸ்ட்ரா குழு இசை அமைக்க, படத்தில் 24 பாடல்கள் இடம்பெற்றது. யு.ஆர்.ஜீவரத்தினம் பாடிய 'தெருவில் வாராண்டி வேலன் தெருவில் வாராண்டி...' பாடல் மிகவும் புகழ்பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !