மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
278 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
278 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
278 days ago
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படம் உலக அளவில் 1600 கோடி வசூலைக் கடந்துள்ளது. ஹிந்தியில் மட்டும் 700 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது என சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இந்திய அளவில் அதன் வசூல் தற்போது 1300 கோடியைக் கடந்துள்ளது. நிகர வசூலாக 1100 கோடியைப் பெற்றுள்ளது.
படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்த பின்பும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று வருகிறது. தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த வாரங்களில் புதிய படங்கள் சில வெளிவந்தாலும் இப்படத்தின் வசூலுக்குப் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இந்த கிறிஸ்துமஸ் விடுமுறை நாளிலும் படம் வசூலைப் பெற்று வருவதால் இதன் வசூல் கணக்கு நாளுக்கு நாள் கூடித்தான் வருகிறது.
இந்திய அளவில் இந்தப் படம் புரிந்து வரும் வசூல் சாதனையை அடுத்து வெளிவர உள்ள எந்த ஒரு பிரம்மாண்டப் படமாவது இவ்வளவு குறைவான நாட்களில் புரியுமா என்பது சந்தேகம் என பாக்ஸ் ஆபீஸில் தெரிவிக்கிறார்கள்.
278 days ago
278 days ago
278 days ago