எதிர்பார்ப்பை எகிற வைத்த சிந்து பைரவி புரோமோ!
ADDED : 296 days ago
விஜய் தொலைக்காட்சியில் மிக விரைவில் 'சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்' என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. டூயல் ஹீரோ / ஹீரோயின் சப்ஜெக்ட்டான இந்த தொடரில், ரவீணா தாஹாவும் தெலுங்கு சின்னத்திரை நடிகையான பவித்ரா நாயக்கும் ஹீரோயினாக நடிக்கின்றனர். ஈரமான ரோஜாவே தொடரில் நடித்த திரவியமும், செல்லம்மா தொடரில் நடித்த அனந்த கிருஷ்ணனும் ஹீரோவாக நடிக்கின்றனர். இதன் புரோமோவானது அண்மையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.