உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவை விளம்பரப்படுத்த வழக்கு போடுவதா? - நீதிமன்றம் கண்டனம்

சினிமாவை விளம்பரப்படுத்த வழக்கு போடுவதா? - நீதிமன்றம் கண்டனம்

ஒரு சினிமாவை விளம்பரப்படுத்துவதற்காக வேண்டுமென்றே உப்புசப்பில்லாத விஷயங்களுக்கு வழக்கு போடுவது அதிகரித்துள்ளது. இதன் மூலம் பத்திரிகைகளில் அந்த படம் பற்றிய செய்திகளை வரவழைத்து அதன் மூலம் விளம்பரம் தேடிக் கொள்வது நடைமுறையில் உள்ளது. இதனை மதுரை உயர்நீதி மன்றம் கண்டித்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கறிஞர்கள் சிலர், ஆர்.ஜே.பாலாஜி நடித்த 'சொர்க்கவாசல்' என்ற சினிமா படம் ஓ.டி.டி.யில் விரைவில் வெளியாகிறது. இந்த படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் அவரை பின்பற்றுபவர்களை இந்த சினிமா, அவமதிப்பதாக கருதப்படுகிறது. எனவே இந்த சினிமாவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று மனு கொடுத்தனர்.

இதற்கு பதலிளித்த நீதிமன்றம் “பல்வேறு பகுதிகளிலும் வெளியாகும் சினிமாவுக்கு மதுரையில் எப்படி தடை விதிக்க முடியும்? சினிமாவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்து, சினிமாவை பிரபலப்படுத்துவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. ஏராளமான பணத்தை செலவு செய்து தயாரிக்கும் சினிமாவுக்கு தடை கோரி வழக்கு தொடருவது ஏற்புடையதல்ல. இந்த கோரிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறியது. நீதிமன்றத்தின் இந்த கண்டனம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !