சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்!
ADDED : 293 days ago
நடிகை கீரத்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் முதல் முறையாக ஹிந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாக 'பேபி ஜான்' எனும் படத்தில் நடித்திருந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ், ஆண்டனி என்ற அவரது நீண்ட வருட காதலரை கரம் பிடித்தார். தற்போது திருமணம் ஆனதால் சினிமாவில் இருந்து முழுமையாக விலக கீர்த்தி சுரேஷ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கீர்த்தி சுரேஷ் கைவசமாக ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி ஆகிய படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.