வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்ஷய் குமார்?
ADDED : 364 days ago
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக விஜய் நடித்து ' தி கோட்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக இருந்தது. தற்போது அந்த படம் சற்று தள்ளி வைக்கப்பட்டதால் வெங்கட் பிரபு மற்ற ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை சமீபத்தில் சந்தித்து வெங்கட் பிரபு புதிய படத்திற்கான கதை குறித்து பேசியுள்ளார். விரைவில் அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நகரும் என்கிறார்கள்.