பிக்பாஸ் ஜெப்ரிக்கு கிடைத்த தடபுடல் வரவேற்பு
ADDED : 333 days ago
பிக்பாஸ் சீசன் 8 இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில் போட்டியாளர்கள் பலரும் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்போடு உறுதியாக விளையாடி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் 83 நாட்கள் தங்கியிருந்த ஜெப்ரி போட்டியின் 12 வது வாரத்தில் ஜெப்ரி எலிமினேட் ஆகி வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜெப்ரிக்கு அவரது ஏரியா மக்கள் மேள தாளத்துடன் தடபுடல் வரவேற்பு கொடுத்துள்ளனர். அதன் வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.