புது கார் வாங்கிய பிக்பாஸ் தாமரை
ADDED : 288 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் புகழ் பெற்ற பிரபலங்களில் தாமரை முக்கியமானவர். அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தாமரையின் வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமா, சீரியல் என பல வாய்ப்புகளை பெற்று வருகிறார். முன்னதாக தனக்காக புது வீடு ஒன்றை கட்டியிருந்த தாமரை, சமீபகாலங்களில் மிகவும் மாடர்னாக, வெளிநாடு சுற்றுலா என என்ஜாய் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் புதிதாக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். தாமரையின் இந்த வளர்ச்சிக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.